×

கல்லணை காவிரி ஆற்றில் சீறிப்பாய்ந்தோடிய தண்ணீர் ஜோசியம் பார்ப்பதாக கூறி நகை திருடிய வாலிபர் கைது

 

கும்பகோணம், ஆக. 14: கும்பகோணம் அருகே சுவாமிமலை பகுதியில் ஜோசியம் பார்ப்பதாக கூறி வீட்டுக்குள் புகுந்து நகையை திருடி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மணப்படையூர் பகுதியில் மர்ம நபர் ஒருவர் ஜோசியம் பார்ப்பதாக கூறி வீட்டிற்குள் நுழைந்து உள்ளார. அந்த வீட்டில் இருந்த நபர்களை ஏமாற்றி நகைகளை திருடி சென்றதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து எஸ்பி ஆசிஷ்ராவத் உத்தரவின்படி, கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்திவாசன் மேற்பார்வையில், தனிப்படை எஸ்ஐ கீர்த்திவாசன் தலைமையில் எஸ்எஸ்ஐ செல்வகுமார், தலைமை காவலர் பாலசுப்ரமணியம், நாடிமுத்து, ஜனார்த்தனன், செந்தில்குமார், ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சிசிடிவி கேமரா பதிவுகளையும், செல்போன் எண்களையும் கண்காணித்து வந்தனர். அதன்பேரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கிருஷ்ணகிரியை சேர்ந்த மாதையன் மகன் சக்திவேல் (23) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து 5 கிராம் தங்க நகை, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து சக்திவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கும்பகோணம் கிளைச்சிறையில் அடைத்தனர்.

The post கல்லணை காவிரி ஆற்றில் சீறிப்பாய்ந்தோடிய தண்ணீர் ஜோசியம் பார்ப்பதாக கூறி நகை திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kallana river Cauvery ,Kumbakonam ,Swamimalai ,Kallanai ,Cauvery river ,Dinakaran ,
× RELATED சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கார்த்திகை தீபதிருவிழா கொடியேற்றம்