×

முக்கூடல் நாராயண சுவாமி கோயிலில் ஆடித் திருவிழா கோலாகலம்

 

பாப்பாக்குடி, ஆக.14: முக்கூடல் நாராயண சுவாமி கோயிலில் ஆடித் திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். முக்கூடல் நாராயண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தவாரி முன் வர, மன் நாராயணசுவாமி சப்பரத்தில் கருடன் திருக்கொடியை ஏந்தி ரதவீதிகளை வலம்வந்து கொடியேற்றும் வைபவம் நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் காலை சிறப்பு பூஜை, உச்சிப்படிப்பு, மாலை தீர்த்தவாரி, இரவில் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் ரதவீதிகளில் சுவாமி வீதியுலா நடந்தது.

அத்துடன் எஸ்எஸ்கேவி சாலா பள்ளி மாணவர்கள், கலைநிகழ்ச்சி, பூ விஜேஷ் பள்ளி மாணவர்களின் கலக்கல் நிகழ்ச்சி, சேவா பாரதி குழுவினர், முக்கூடல் மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. மேலும் பாப்பாக்குடி நியூ லைப் பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சி, அம்பை மெரிட் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, முக்கூடல் பாலகன் சரஸ்வதி மகளிர் கல்லூரி மாணவிகளின் கண்கவர் நிகழ்ச்சி, பக்தி இன்னிசை, அய்யா வழி இசை வழிபாடு, அன்னதானம் வழங்குதல் ஆகியன நடைபெற்றன. விழாவின் சிகரமான லட்சுமி நாராயணர் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. இதில் முக்கூடல் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர் காண்டீபன் தலைமையில் முக்கூடல் இந்து நாடார் விஷ்ணு சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post முக்கூடல் நாராயண சுவாமி கோயிலில் ஆடித் திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Adith Festival ,Narayana swamy ,temple ,Papakudi ,3some Narayana swami temple ,
× RELATED கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்