×

வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் நியமனம்

சென்னை: திமுக வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமித்து வழக்கறிஞர் அணிச்செயலாளர் என்.ஆர்.இளங்கோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி-மாவட்ட செயலாளர் ஒப்புதலோடு திமுக வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவராக பி.பாண்டியராஜன், துணை தலைவராக வாஞ்சிநாதன், அமைப்பாளராக என்.கனகராஜ், துணை அமைப்பாளர்களாக இ.நடராஜன், து.ரகுபதி, பால அமுதநாதன், ஜி.எஸ்.விஜயகுமார், க.ரமேஷ்பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர்- தம்பிதுரை, துணை தலைவர்- வி.எம்.பாளையத்தான், அமைப்பாளர்- பி.எஸ்.ரமேஷ், துணை அமைப்பாளர்கள்- அ.அர்ஜூன், இ.எல்.கண்ணன், ஆர்.பன்னீர்செல்வம், எஸ்.துரைமுருகன், எம்.பிரியங்கா.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர்-எஸ்.அசோக்குமார், துணை தலைவர் ஜி.ரமேஷ், அமைப்பாளர்- எஸ்.கோபி, துணை அமைப்பாளர்கள்-அ.சீனிவாசன், எம்.சுரேஷ், கே.மூர்த்தி, கே.சரவணன். திருவள்ளூர் மத்திய மாவட்ட தலைவர்- என்.பி.மாரிமுத்து, துணை தலைவர்- ராஜேந்திரன், அமைப்பாளர்- பெ.வினோத், துணை அமைப்பாளர்கள்- இ.நாகராஜன், துரை.பழனி, பொன். புனிதவராஜன், எஸ்.செந்தில்குமார், பா.முருகன். திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர்-வி.எஸ்.சதீஷ், துணை தலைவர்-டி.எம்.பவானி, அமைப்பாளர்-பி.கே.நாகராஜ், துணை அமைப்பாளர்கள- த.தானியேல், ஆர்.பாஸ்கரன், ஜெ.லூகா, ஆர்.முரளி, எல்.அறிவழகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதே போல பல்வேறு மாவட்டங்களுக்கு அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dizhagam Advocate Team ,N. R.R. Ilango ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...