
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகளுடனான டி20 தொடரில் இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாத இறுதியில் தொடங்கும் ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் அவர் மீண்டும் தலைமை பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில், குடும்பத்தினருடன் நேற்று திருப்பதி சென்ற ரோகித் ஏழுமலையானை தரிசனம் செய்தார். ஆசிய கோப்பையில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்திலேயே பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டி, இலங்கையின் பல்லெகெலே சர்வதேச கிரிக்கெட் அரங்கில் செப்.2ம் தேதி நடக்கிறது.
The post திருப்பதியில் ரோகித் appeared first on Dinakaran.