×

ரொனால்டோ அசத்தலில் அல்-நசர் சாம்பியன்

சவுதி அரேபியாவில் நடந்த அரபு கிளப் சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டித் தொடரில், அல் நசர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் அல்-ஹிலால் அணியுடன் மோதிய அல்-நசர் அணி 0-1 என பின்தங்கிய நிலையில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (38 வயது, போர்ச்சுகல்) அடுத்தடுத்து 2 கோல் போட்டு அசத்தினார்.

கூடுதல் நேரத்தில் அல்-நசர் அணியின் 2 வீரர்கள் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையிலும் அந்த அணி ரொனால்டோவின் அமர்க்களமான ஆட்டத்தால் வெற்றியை வசப்படுத்தி முதல் முறையாக அரபு கிளப் சாம்பியன்ஸ் கோப்பையை முத்தமிட்டது குறிப்பிடத்தக்கது.

The post ரொனால்டோ அசத்தலில் அல்-நசர் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Al-Nasr ,Ronaldo ,Arab Club Champions Cup ,Saudi Arabia ,Al Nasser ,
× RELATED 38 வயதிலும் கலக்கி வரும் கிறிஸ்டியானோ...