×

நாஞ்சில் கோலப்பன் அதிமுகவில் இருந்து நீக்கம்: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் விதமாக செயல்பட்டதால் நாஞ்சில் கோலப்பனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக அமைப்புச் செயலாளர், நாஞ்சில் கோலப்பன் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. இவ்வாறு ஓபிஎஸ் கூறியுள்ளார்.

The post நாஞ்சில் கோலப்பன் அதிமுகவில் இருந்து நீக்கம்: ஓபிஎஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nanjil Golappan ,AIADMK ,Chennai ,O. Panneerselvam ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...