×

கேரள காங்கிரஸ் தலைவருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

திருவனந்தபுரம்: மோசடி வழக்கில் வரும் 18ம்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரனுக்கு மத்திய அமலாக்கத்துறை நோட்டீஸ் வழங்கி உள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் மோன்சன். இவர் கொச்சியில் போலி புராதன பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தியதாக கூறப்பட்ட புகாரில் கடந்த 2 வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் மீதும் புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. மாநில குற்றப்பிரிவு போலீசும் சுதாகரன் மீது வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து சுதாகரன் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் வரும் 18ம்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சுதாகரனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் வழங்கி உள்ளது.

The post கேரள காங்கிரஸ் தலைவருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Enforcement department ,Kerala Congress ,Thiruvananthapuram ,Central Enforcement Department ,Kerala State Congress ,President ,Sudhakaran ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...