×

வறட்சி மாநிலமாக அறிவிப்பதற்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு முதல்வர் சித்தராமையா கோரிக்கை

பெங்களூரு: ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா எழுதியுள்ள கடிதத்தில், ‘கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் வழக்கமாக 336 மிமீ மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு வெறும் 234 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது. ஒன்றிய அரசு ஒரு மாநிலத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வகுத்துள்ள விதிகளை பூர்த்தி செய்ய முடியாததால், கர்நாடக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வானிலை மாற்றம் மற்றும் மோசமான காலநிலையால் விவசாயமும் விவசாயிகளும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்போதைய சூழலில், வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படுவதற்கான விதிமுறைகளின் படியெல்லாம் செயல்படுவது கடினம். எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க, கடும் விதிமுறைகளை பிடித்து தொங்காமல் அரசு நெகிழ்வுத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. எனவே வறட்சி மாநிலமாக அறிவிப்பதற்கான கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு தளர்த்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post வறட்சி மாநிலமாக அறிவிப்பதற்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு முதல்வர் சித்தராமையா கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : CM Siddaramaiah ,Union government ,Bengaluru ,Karnataka ,Chief Minister ,Siddaramaiah ,Union Agriculture ,Minister ,Narendra Singh Tomar ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...