×

மீன்பிடித்தபோது முதலை வாயில் சிக்கிய விவசாயி


தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வேப்பூர் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(55), விவசாயி. இவர் நேற்று சாத்தனூர் அணையையொட்டிய தென்பெண்ணையாற்று பகுதியில் மீன் பிடித்தபோது திடீரென அவரை முதலை ஒன்று கவ்வியது. இதனால் நிலைதடுமாறி விழுந்த அவரின் வயிற்றுப்பகுதியை முதலை கவ்வி ஆற்றுக்குள் இழுத்துச்செல்ல முயன்றது. வெங்கடேசன் கூச்சலிடவே, சத்தம் கேட்டு அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த சிலர் ஆற்றில் இறங்கி போராடி முதலையின் பிடியில் இருந்து வெங்கடேசனை விடுவித்தனர். தொடர்ந்து, படுகாயமடைந்த அவரை தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

The post மீன்பிடித்தபோது முதலை வாயில் சிக்கிய விவசாயி appeared first on Dinakaran.

Tags : Thandarampattu ,Venkatesan ,Vepur Sekkadi village ,Thiruvannamalai district ,Chatanur Dam ,Dinakaran ,
× RELATED ஒரு இரயில்வே அதிகாரிக்காக ஆயிரம்...