![]()
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தின் சிறப்பம்சமாக ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான சிக்னல், கட்டுப்பாடு மற்றும் காணொலி மேலாண்மை அமைப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பயணிகளுக்கு தேவையான பல்வேறு சிறப்பு வசதிகளை மெட்ரோ நிர்வாகம் செய்து வருகிறது அந்த வகையில் பயணிகளின் செல்போன்களை சார்ஜ் செய்யும் வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட திட்டத்தில் மூன்று பெட்டிகள் கொண்ட ரயில்கள் இருக்கும் என்பதால், ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் நான்கு சார்ஜிங் பாயின்டுகள்ள் அமைக்க திட்டமிட்டு உள்ளோம், ஆனால், சார்ஜிங் பாயின்ட்களின் எண்ணிக்கை இன்னும் இறுதி செய்யவில்லை விரைவில் இறுதி செய்யப்படும். மாதவரத்திலிருந்து சிப்காட் வரை 45 கிமீ தூரம் பயணித்தால், இத்தகைய வசதிகள் அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
அதுமட்டுமின்றி, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் தேசிய பொது இயக்க அட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு, கடந்த 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இது மெட்ரோ ரயில், மாநகர பேருந்து, புறநகர் ரயில் போக்குவரத்து ஆகியவற்றில் தடையற்ற பயணிக்கலாம். விரைவில் தற்போது உள்ள ஸ்மார்ட் கார்டுகள் தேசிய பொது இயக்க அட்டை ஆக மாற்றப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத ரயில்களில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதி: மெட்ரோ அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.
