×

உடலுறுப்பு தானம் செய்வோம் முதல்வர் டிவிட்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: உடலுறுப்பு தானம் இங்கு ஓர் இயக்கமாவே செயல்பட்டு வருகிறது. தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறர்க்களித்து அவர்களுக்கு வாழ்வளிக்க முன்வருவோம். அனைவரும் உடலுறுப்பு தானம் செய்வோம். ஊட்டச்சத்தை உறுதி செய்: முதல்வரின் மற்றொரு டிவிட்டர் பதிவில், ‘ஓர் அங்கன்வாடி மையத்தில், மெலிந்த ஒரு குழந்தையைப் பார்த்தேன். அதற்கு காரணம் என்னவென்று கேட்டபோது, ஊட்டச்சத்துக் குறைபாடு என்றார்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று நான் சமாதானம் அடைய விரும்பவில்லை. அந்த நிலையை மாற்ற வேண்டும் என தொடங்கப்பட்ட திட்டம்தான் ‘ஊட்டச்சத்தை உறுதிசெய்’ திட்டம் என குறிப்பிட்டுள்ளார்.

The post உடலுறுப்பு தானம் செய்வோம் முதல்வர் டிவிட் appeared first on Dinakaran.

Tags : DeWitt ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...