×

தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்புடன் சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை: போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தகவல்

சென்னை: ‘‘சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, தமிழ்நாடு அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று புதிதாக பதவியேற்றுக்கொண்ட மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர காவல்துறையில் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்த கபில் குமார் சரட்கர் மற்றும் மாநகர வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் (பொறுப்பு) லோகநாதன் ஆகியோர் கடந்த 4ம் தேதி அதிரடியாக மாற்றப்பட்டனர்.. இதையடுத்து மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனராக மேற்கு மண்டல ஐஜியாக இருந்த சுதாகர் நியமிக்கப்பட்டார்.

அதேபோல், தென் மண்டல ஐஜியாக பதவி வகித்து வந்த அஸ்ரா கார்க் சென்னை மாநகர வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதைதொடர்ந்து சென்னை மாநகர வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக அஸ்ரா கார்க் நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டார். அவரிடம் ஐஜி லோகநாதன் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்தார். அதேபோல், சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்த கபில் குமார் சரட்கர் தற்போது சென்னை மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனராக அமர்த்தப்பட்டுள்ளார். போக்குவரத்து கூடுதல் கமிஷனராக நேற்று காலை 10.45 மணிக்கு சுதாகர் பதவியேற்றுக்கொண்டார்.

அவரிடம் அனைத்து பொறுப்புகளையும் கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரட்கர் வழங்கினார். கூடுதல் கமிஷனர் சுதாகருக்கு போக்குவரத்து இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பதவியேற்ற பிறகு, கூடுதல் கமிஷனர் சுதாகர் கூறுகையில், சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழக அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சாலை விபத்துக்களில் இறப்பு விகிதத்தை குறைப்பது தனது முதன்மையான பணியாக இருக்கும் என்றார்.

The post தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்புடன் சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை: போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Government of Tamil Nadu ,Sutagar ,
× RELATED தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு...