×

அண்ணா பல்கலையில் பி.ஆர்க் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை: அண்ணா பல்கலையில் பி.ஆர்க். பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 37 கட்டிடவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பி.ஆர்க். பட்டப்படிப்புகளில் சேருவதற்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக் குழு நேற்று வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, 37 கல்லூரிகளில் மொத்தம் 1,467 இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்து 485 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தார்கள்.

அவர்களில் 1,400 பேரின் விண்ணப்பங்கள் தகுதியுடையவைகளாக கருதப்பட்டுள்ளன. இதில் 30 பேர் அரசு பள்ளி மாணவர்கள். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான சந்தேகங்கள் மற்றும் விவரங்களுக்கு, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக் குழு உருவாக்கியுள்ள சேவை மையத்தை இன்று (திங்கட்கிழமை) முதல் நாளை மறுதினம் (புதன்கிழமை) வரை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அண்ணா பல்கலையில் பி.ஆர்க் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,Anna University Arc ,Arc ,Dinakaran ,
× RELATED தென்காசி குற்றால அருவிகளில்...