×

திம்பம் மலைச்சாலையில் ஹாயாக சிறுத்தை உலா

சத்தியமங்கலம்: திம்பம் மலைச்சாலையில் சிறுத்தை ஹாயாக நடமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகத்தில் ஏராளமான சிறுத்தைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதியில் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திம்பம் மலைச்சாலை 6வது கொண்டை ஊசி வளைவில், ஒரு சிறுத்தை ஜாலியாக நடமாடியது.

அப்போது அவ்வழியே காரில் சென்றவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிறுத்தை நடமாட்டத்தை வீடியோ எடுத்தனர். சிறிது நேரம் சாலையில் நடமாடிய சிறுத்தை வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்டதும் வனப்பகுதிக்குள் சென்றது. தற்போது இந்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

The post திம்பம் மலைச்சாலையில் ஹாயாக சிறுத்தை உலா appeared first on Dinakaran.

Tags : Thimbam mountain ,Sathyamangalam ,Erode District ,Satyamangalam ,Thimpon mountain ,Dinakaran ,
× RELATED தாளவாடி அருகே மாங்காய்களை பறிக்க...