ஜம்மு: நாளை மறுநாள் சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், ஸ்ரீநகரில் நேற்று மூவர்ண கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவின் 77வது சுதந்திர தினம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஜம்மு – காஷ்மீர் காவல்துறை சார்பில் ஸ்ரீநகரில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, மூவர்ண கொடி, பதாகைகளுடன் அணிவகுத்துச் சென்றனர்.
இதுகுறித்து கிழக்கு ஸ்ரீநகர் டிஎஸ்பி சிவம் சித்தார்த் கூறுகையில், ‘சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள 26 பஞ்சாயத்துகளில் மூவர்ண கொடி அணிவகுப்பு நடந்தது. மேரி மாட்டி மேரா தேஷ் என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன’ என்றார். ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர், அங்கு படிப்படியாக அமைதி திரும்பி வருவதால் அங்குள்ள மக்களும், இளைஞர்களும், மாணவர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பொதுவெளியில் பங்கேற்று வருகின்றனர்.
The post நாளை மறுநாள் சுதந்திர தின கொண்டாட்டம்: ஸ்ரீநகரில் மூவர்ண கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.
