×

வனத்துறை கட்டுப்பாட்டில் சென்றது; கொல்லிமலை மாசிலா அருவியில் குளிக்க தடை: பராமரிப்பு பணியால் நடவடிக்கை

சேந்தமங்கலம்: கொல்லிமலை மாசிலா அருவி வனத்துறை கட்டுப்பாட்டில் சென்றதால், பராமரிப்பு பணி காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், சிறந்த சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. தமிழக மட்டுமல்லாமல் அண்டை மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வந்து செல்கின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, சினிபால்ஸ், அரப்பளீஸ்வரர் கோயில் மாசில்லா அருவி, எட்டுக்கை அம்மன் கோயில், தாவரவியல் பூங்கா, சீக்குப்பாறை காட்சிமுனையம், படகு இல்லம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களுக்கு சென்று வருகின்றனர். ஏற்கனவே ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது, வனத்துறையின் மூலம் சுற்றுச்சூழல் மையம் உருவாக்கப்பட்டு சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மாசிலா அருவி, தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை பார்வையிட்ட சேலம் மண்டல வனத்துறை அலுவலர், மாசிலா அருவியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டர். அருவியில் பெண்கள் தனியாக குளிக்க போதிய இட வசதி இல்லை. ஆண்கள் மது அருந்திவிட்டு குளிக்க வருவதால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை ஆய்வு செய்த அதிகாரி, ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக அருவியில் குளிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் தண்ணீர் கொட்டும் பாறைகள் இடையே இடைவெளி ஏற்படுத்தப்பட்டு, பெண்கள் தனியாக குளிக்க மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நடைபாதை, உடைமாற்றும் அறை, பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்டவை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என வனத்துறை ரேஞ்சர் சுப்பராயன்
தெரிவித்துள்ளார்.

The post வனத்துறை கட்டுப்பாட்டில் சென்றது; கொல்லிமலை மாசிலா அருவியில் குளிக்க தடை: பராமரிப்பு பணியால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Kollimala Masila Falls ,Senthamangalam ,Kollimalai Masila ,Kollimala Masila ,Dinakaran ,
× RELATED கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 26வது நாளாக வனத்துறை தடை