×

தெலங்கானா மாநிலத்தில் ஊருக்குள் புகுந்த கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

திருமலை: தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் ஊருக்குள் புகுந்த கரடியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். தெலங்கானா மாநிலம், கரீம் நகர் பொம்மக்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராஜ்வி சமன் காலனி, ஸ்ரீநகர் காலனியில் குடியிருப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கரடி ஒன்று வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர்.

மேலும் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் அச்சத்தில் காவல் காத்து வந்தனர். பின்னர், இது குறித்து அப்பகுதி மக்கள் நேற்று காலை போலீசில் புகார் அளித்தனர். இத்தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் கரடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணிநேரம் போராடியும் கரடியை பிடிக்க முடியாததால் இறுதியாக கால்நடை மருத்துவரின் அறிவுறுத்தலின்படி கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

மேலும், பிடிபட்ட கரடியை ஹைதராபாத் உயிரியல் பூங்காவிற்கு எடுத்து செல்ல இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தெலங்கானா மாநிலத்தில் ஊருக்குள் புகுந்த கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Tirumalai ,Karimnagar ,Kareem ,
× RELATED சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக...