×

தேசிய கூடைப்பந்து போட்டி வெள்ளி பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு

பட்டிவீரன்பட்டி, ஆக. 13: பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 9ம் வகுப்பு மாணவி தாரிகா 13 வயதுக்குட்பட்டோருக்கான தமிழக கூடைப்பந்தாட்ட அணியில் விளையாட தேர்வு பெற்றார். அதனையடுத்து அவர் புதுச்சேரியில் நடைபெற்ற 13 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய கூடைப்பந்து போட்டியில் தமிழக அணிக்காக விளையாடினார். இதில் தமிழக அணி வெள்ளி பதக்கம் பெற்றது.

போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி வெள்ளி பதக்கம் பெற்ற தாரிகாயையும், இதேபோல் 13 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் தமிழக அணியில் இடம் பெற்று தேசிய அளவில் விளையாடி 7ம் இடம் பிடித்த இதே பள்ளியின் 8ம் வகுப்பு மாணவர் அருண்பாண்டியன் மற்றும் பயிற்சியாளர்கள் செந்தில்குமார், வெண்மணி, கணேஷ்குமார் ஆகியோரை இந்து நாடார்கள் உறவின்முறை சங்க தலைவர் முரளி, செயலர் மோகன்குமார், பள்ளி தலைவர் கோபிநாத், செயலர் பிரசன்னா, பள்ளி முதல்வர் ஆத்தியப்பன் ஆகியோர் பாராட்டினர்.

The post தேசிய கூடைப்பந்து போட்டி வெள்ளி பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : National Basketball Competition ,N. S.S. CV CV Tamil Nadu Basketball School ,Metric Higher School ,Tamil Nadu ,
× RELATED பெரம்பலூர் கிறிஸ்டியன் மெட்ரிக்...