×

உலக யானைகள் தினம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

பழநி, ஆக. 13: பழநி வனச்சரகம் சார்பில் உலக யானைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பழநி கோயில் யானை கஸ்தூரி தங்குமிடத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வனச்சரகர் பழனிக்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் வன வள பாதுகாப்பில் யானைகளின் பங்கு, யானைகளை பாதுகாப்பதன் நன்மை, யானைகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து வனத்துறையினர் எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பழநி பகுதியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பழநி வனத்துறை அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் வன விலங்குகளை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கோயில் யானை கஸ்தூரிக்கு மாணவ, மாணவிகள் பழங்கள் வழங்கினர்.

The post உலக யானைகள் தினம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : World Elephant Day ,Palani ,Forestry ,Dinakaran ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்