×

சாலையோர வியாபாரிகளுக்கு தீபாவளி விற்பனை பாதிப்பு ஒரு மணி நேர கனமழையால் வெள்ளத்தில் மிதந்த ரதவீதிகள்-நெல்லையப்பர் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது

நெல்லை : நெல்லையில் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் நெல்லை டவுன் ரதவீதிகளில் மழை நீர் வெள்ளமாய் தேங்கியது. இதனால் சாலையோர வியாபாரிகளுக்கு தீபாவளி விற்பனை பாதிப்படைந்தது.தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் மழை சற்று ஓய்வு எடுத்தது. நன்பகலில் வெயில் எட்டிப்பார்த்த நிலையில் பிற்பகல் 2.15 மணிக்கு கருமேகம் திரண்டு மாநகரின் ெபரும்பாலான பகுதியில் கனமழை பெய்தது. தீபாவளி பொருட்கள் வாங்க சாலைகளில் திரண்டிருந்தவர்கள் கனமழையால் பாதுகாப்பான இடம் தேடி ஓட்டம் பிடித்தனர். இடி, மின்னலுடன் பெய்த இந்த கனமழை சுமார் ஒருமணி நேரம் நீடித்தது. இதனால் ஏற்கனவே மழைநீர் சூழ்ந்திருந்த தாழ்வான பகுதிகளில் மேலும் குட்டைபோல் நீர் தேங்கியது. நெல்லை டவுன் வடக்கு ரதவீதி உள்ளிட்ட ரதவீதி பகுதிகளில் மழைநீர் முட்டளவு தேங்கியது. இதனால் சாலையோர கடைகளை வியாபாரிகள் தற்காலிகமாக மூடினர். தீபாவளிக்காக கூடுதலாக இயங்கிய ஆயத்த ஆடைகள் மற்றும் அழகு சாதான பொருட்களை விற்பனை செய்யும் தற்காலிக கடைகள் உள்ள பகுதிகளில் நீண்ட நேரம் தண்ணீர் தேங்கியிருந்ததால் அவர்களது வியாபாரம் பாதிக்கப்பட்டது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்கள் நடந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதுபோல் டவுன் போஸ் மார்க்கெட், சேரன்மகாதேவி சாலையிலும் மழைநீர் அதிகளவில் தேங்கியது. வண்ணார்பேட்டை, நெல்லை சந்திப்பு உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியதாலும், சாலைகள் சேதமடைந்திருந்ததாலும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேடுபள்ளம் தெரியாமல் வாகனங்கள் தடுமாறின.இதனால் பிற்பகல் தொடங்கி இரவு வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சுவாமி நெல்லையப்பர் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.மழை விட்ட பின்னரும் தொடர்ந்து மேகமூட்டமாக இருந்தது. பாளையங்கோட்டையில் நேற்று மாலை நிலவரப்படி 44 மிமீ மழையும், நெல்லையில் 22 மிமீ மழையும் பதிவானது. இதனிடையே நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மரம் மின்கம்பத்தில் சாய்ந்ததுநெல்லை  மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் பழமையான  மரங்கள் சாய்ந்து வருகின்றன. இந்நிலையில் நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு  பைபாஸ் சாலை அருகேயுள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் பழமையான பெரிய அளவிலான  வாகைமரம்,  திடீரென வேரோடு சாய்ந்து அருகில் உள்ள உயர்அழுத்த  மின்கம்பி மீது விழுந்தது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை ஏற்பட்டது. தகவல் அறிந்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சார்லஸ்,  உதவி மின் பொறியாளர் அபிரமினதன் மற்றும் மின்வாரிய பணியாளர்கள், தீயணைப்பு  படையினர், போலீசார் சம்பவ இடம் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். நவீன  கருவிகள் மூலம் மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. தொடர்ந்து 3 மணி நேரம்  மீட்பு பணி நடந்தது. தொடர்ந்து மின் இணைப்பு வழங்கப்பட்டு நிலைமை சீரானது. …

The post சாலையோர வியாபாரிகளுக்கு தீபாவளி விற்பனை பாதிப்பு ஒரு மணி நேர கனமழையால் வெள்ளத்தில் மிதந்த ரதவீதிகள்-நெல்லையப்பர் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது appeared first on Dinakaran.

Tags : Diwali ,Rathaveedihal-Nellaiyapar ,Nellai ,
× RELATED நெல்லை மாவட்டத்தில் லஞ்சம் கேட்டால் புகார் தர எண்கள் அறிவிப்பு