×

சமணர் படுகையில் மாணவர்களுக்கு யோகா விழிப்புணர்வு

மதுரை, ஆக. 13: ஆரோக்கியமாக வாழ மூச்சுப் பயிற்சி, பிராணயாமம் உள்ளிட்ட யோகக்கலைகள் துணை புரியும் என்பதை உணர்த்தும் விதமாக மதுரை கீழக்குயில்குடி சமணர் படுகையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு தேனி மாவட்ட பள்ளிகளின் மாணவர்கள் இங்குள்ள சமணர் படுகை, குகை பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டனர். இங்குள்ள சமண துறவிகள் உள்ளிட்டோரின் சிற்பங்கள், ஓவியங்களை மாணவர்களுக்கு சுட்டிக்காட்டி பல காலங்களாகவே யோக கலை உள்ளதையும் விளக்கினர். இந்தக் கலை தெரிந்ததாலேயே அவர்கள் ஆரோக்கியமாக 80 முதல் 100 ஆண்டுகள் வரையிலும் வாழ்ந்ததைச் சுட்டிக்காட்டினர்.

பெரும்பாலும் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அந்த சிற்பங்கள் யோகக்கலையின் சிறப்புகளை உணர்த்துவதை சொல்லி, அதற்கு முன்பாகவே யோகாசனம் செய்ய வைத்து பயிற்சி கொடுத்தனர். மாணவர்களுடன் தேனி மாவட்ட யோகாசன சங்கம், கம்பம் ரிஷி யோகா அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். துரை ராஜேந்திரன், ரவி ராம் ஆகியோர் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். இயற்கை சூழ அமைதியாக, குகைகள் மற்றும் கல் படுக்கைகளுக்கு மத்தியில் யோகாசனம் செய்தது தங்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்த விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

The post சமணர் படுகையில் மாணவர்களுக்கு யோகா விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Samanar Badhu Madurai, Ga. ,Samanar Badow ,
× RELATED திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283...