×

புதுச்சேரி அருகே கார் விபத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலக உதவியாளர், மனைவி பரிதாப பலி

 

காலாப்பட்டு, ஆக. 13: புதுச்சேரி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த கார் விபத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலக உதவியாளர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர்.  சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் வர்ஷன்(57). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லலிதா(55), மகன் சிவராமகிருஷ்ணன்(23). இவர்கள் 3 பேரும் நேற்றுமுன்தினம் சென்னையில் இருந்து மயிலாடுதுறை கோயிலுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தனர்.

சிவராமகிருஷ்ணன் காரை ஓட்டி வந்தார். புதுவை அருகே காலாப்பட்டு அடுத்த மஞ்சக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் இரவு 11 மணியளவில் கார் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். இதனால் அவர் மீது மோதாமல் இருக்க சிவராமகிருஷ்ணன் பிரேக் பிடித்துள்ளார். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த வேப்பமரத்தின் மீது அதிவேகமாக மோதியது.

இதில் காரில் இருந்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வர்ஷன் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவராமகிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுச்சேரி அருகே கார் விபத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலக உதவியாளர், மனைவி பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Puducherry ,Kalapattu ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!