×

நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை

 

சாயல்குடி, ஆக.13: கமுதியில் இருந்து கோவிலாங்குளம் வழியாக கடலாடிக்கு அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டது, காலை, மாலை என இரு வேளை மட்டும் வந்து செல்லும் இந்த பஸ்ஸை கடலாடி, கோவிலாங்குளம் வழித்தடத்தில் உள்ள மங்களம் ஆப்பனூர் தெற்கு கொட்டகை, கொம்பூதி, காத்தாகுளம், மோயங்குளம், ஆரைக்குடி, ஒச்சதேவன்கோட்டை, பறையங்குளம், கோவிலாங்குளம், பட்டி, ஓ.கரிசல்குளம், தோப்படைப்பட்டி, செங்கற்படை, புதுக்கோட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமமக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தி வந்தனர்.

கிராமமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் வாரச்சந்தைகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளி,கல்லூரி உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் நகரங்களான கடலாடி, கமுதி சென்று வந்தனர். இந்தநிலையில் திடீரென கடந்த ஜூன் மாதத்திற்கு முன்பு வரை சுமார் ஒரு மாத காலம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் பஸ் இயக்க கோரி தினகரனில் செய்தி வெளியானது.

இதனை தொடர்ந்து ஓரிரு நாட்கள் மட்டும் பஸ் இயக்கப்பட்டது. அதன் பிறகு 20 நாட்களுக்கு மேலாக பஸ் இயக்கப்பட வில்லை. இதனால் பஸ் போக்குவரத்தின்றி ஆட்டோக்களில் கூடுதல் செலவு செய்து பயணம் மேற்கொண்டு வருவதாக கிராமமக்கள் கூறுகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் மீண்டும் பஸ் இயக்க வேண்டும் என கடலாடி,கமுதி பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sayalkudi ,Kamudi ,Kuddaladi ,Kovilangulam ,Dinakaran ,
× RELATED சாயல்குடி குடிசை மாற்று வாரிய...