×

தேவதானப்பட்டி அருகே அரசு பள்ளியில் பெரியகுளம் கல்வி மாவட்ட குறுவட்ட விளையாட்டு போட்டிகள்

தேவதானப்பட்டி, ஆக. 13: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டது. பெரியகுளம் கல்வி மாவட்ட அளவில் 2023-2024 ஆண்டிற்கான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்த குறுவட்ட போட்டிகளில் சதுரங்க போட்டியினை கெங்குவார்பட்டி அரசு பள்ளி ஏற்று நடத்துகிறது. இந்த போட்டி தொடக்க விழாவில் உடற்கல்வி ஆசிரியர் வசந்த பிரேமா வரவேற்றார்.
உதவி தலைமை ஆசிரியர் அப்பாஸ் தலைமை வகித்தார். பள்ளியின் பெற்றோர் இணைச் செயலாளர் ராஜேந்திரன் போட்டியினை தொடங்கிவைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க துணை தலைவர் பொன்முடி முன்னிலை வகித்தார்.

சதுரங்க போட்டியின் விதிமுறைகள் பற்றி உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக்ராஜா மாணவர்களுக்கு விளக்கி கூறினார். போட்டியில் பெரியகுளம் கல்வி மாவட்ட அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மற்றும் மெட்ரிக் பள்ளியில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் முதுகலை ஆசிரியர் பிரான்சிஸ் போர்ஜியோ நன்றி கூறினார்.

The post தேவதானப்பட்டி அருகே அரசு பள்ளியில் பெரியகுளம் கல்வி மாவட்ட குறுவட்ட விளையாட்டு போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Periyakulam Education District CD Sports Competitions ,Govt ,School ,Devadanapatti ,Periyakulam Education District CD Sports Competition ,Kenguarpatti Government Higher Secondary School ,Devadhanapatti ,Government School ,Dinakaran ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...