×

திருநின்றவூர் கல்லூரியில் விழிப்புணர்வு பேரணி

 

திருவள்ளூர், ஆக. 13: திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக கல்லூரி அறக்கட்டளைத் தலைவர் பேராசிரியர் கனகராஜ் உத்தரவின் பேரில், போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் குகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். சுதா அனைவரையும் வரவேற்றார். இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இதில் கலந்துகொண்டு போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.

இதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருநின்றவூர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார், பெண் உதவி ஆய்வாளர் பாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தனர். இதில் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் புவனேஷ், உணவு மற்றும் விருந்தோம்பல் துறைத் தலைவர் பேராசிரியர் சின்னராஜா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் குணசேகர், அலமேலுமங்கை, சுமதி, காயத்ரி, ஜமுனாராணி, மருதவேல், வணிகவியல் துறை பேராசிரியர் பூங்குழலி, உயிர்த் தொழில் நுட்பவியல் துறைப் பேராசிரியர் ரம்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திருநின்றவூர் கல்லூரியில் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Awareness Rally ,Thiruninnavur College ,Tiruvallur ,Thiruninnavur Jaya College of Arts and Science National Welfare Program ,Youth Red Cross ,Tiruninnavur College ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் தொகை...