×

நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட்; உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆலோசனை: ஆதிர்ரஞ்சன் சவுத்திரி அறிவிப்பு

புதுடெல்லி: மக்களவையில் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் பேசும்போது சபைக்கு இடையூறு விளைவித்ததாக கூறி காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதே போல், எதிர்க்கட்சிகளின் 4 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இது குறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று அளித்த பதிலில், ‘‘நான் தூக்கிலிடப்பட்டேன். அதன் பிறகு விசாரணையை எதிர்கொள்ள வேண்டுமென்ற சூழ்நிலையில் உள்ளேன். எனது சஸ்பெண்ட் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். பிரதமர் மோடி உட்பட யாரையும் அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. நான் பேசிய வார்த்தைகள் அவர்களை புண்படுத்தியிருந்தால் அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியிருக்கலாம். ஆனால் சஸ்பெண்ட் செய்வது மிகவும் வினோதமானது. ஆபத்தானது’’ என்றார்.

The post நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட்; உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆலோசனை: ஆதிர்ரஞ்சன் சவுத்திரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Parliament ,Supreme Court ,Adriranjan Choutri ,New Delhi ,Congress ,Aadir Ranjan ,Modi ,House ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு