×

ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல்

பாரீஸ்: ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஈபிள் டவர் உலக சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு வெடிகுண்டு இருப்பதாக நேற்று மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ஈபிள் டவர் மூடப்பட்டது. பின்னர் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்ட பிறகு அந்த மிரட்டல் போலியானது என்று தெரிய வந்தது. 2 மணிநேரம் கழித்து எச்சரிக்கை நீக்கப்பட்டு மீண்டும் ஈபிள் டவர் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது.

The post ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Eiffel Doer ,Paris ,Eiffel Towers ,France ,
× RELATED பாரிஸ் ஸ்குவாஷ் வேலவன் சாம்பியன்