×

எம்எல்ஏ அறிவிப்பு திமுக ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் இன்று நடக்கிறது

சென்னை: திமுக ஆதி திராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று நடக்கிறது என்று அக்குழுவின் மாநில செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தெரிவித்துள்ளார். திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநிலச் செயலாளரும், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏவுமான ஆ.கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு: திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் அறிவித்தபடி கலைஞரின் சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை கோட்பாடுகளை கொண்டு சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, இந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post எம்எல்ஏ அறிவிப்பு திமுக ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Thisagam Aditravidar Welfare Groups Meeting ,Chennai ,Dizhagam Adi dravidar welfare committee ,Krishnasamy ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...