
சென்னை:தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு போதுமான பாதுகாப்பு புகலிடங்களாக செயல்படுகின்றன. அத்தியாவசிய ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி மற்றும் அத்தகைய வாய்ப்புகள் கிட்டாத குழந்தைகளுக்கு அது கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இத்தகைய அங்கன்வாடி மையங்களில் மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு மேற்கொள்வது முக்கியம். இவ்வாறு ஆய்வு மேற்கொள்ளும்போது அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றை சரியான முறையில் அளவிடவும், அந்த மையங்களின் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை நல்வழிபடுத்த வழிவகை செய்ய வேண்டும்.
* கட்டிட பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கட்டிடத்தின் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, சாத்தியமான அபாயங்கள் அல்லது கட்டிடமைப்பு சிக்கல்கள் ஆவணப்படுத்தி அதை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* சுத்தமான குடிநீர் விநியோகம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அங்கன்வாடி மையத்தில் குழந்தை ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாசகங்கள், அது குறித்தான ஓவியங்கள் வர்ணம் தீட்டி வைக்க வேண்டும்.
* குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.
* விளையாட்டு வளாகத்தை கண்காணித்தும், தேவைக்கேற்ற உட்புற விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுவதை ஆய்வு செய்ய வேண்டும். சத்துமாவு, முட்டைகள் அக்மார்க் தரத்தில் உள்ளதாஎன்பதை உறுதி செய்ய வேண்டும்.
The post தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதா என உறுதி செய்ய வேண்டும்: மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு appeared first on Dinakaran.