×

கல்லணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தடையின்றி தண்ணீர்: தலைமை பொறியாளர் உத்தரவு

தஞ்சாவூர்: குறுவை சாகுபடிக்கு தடையின்றி தண்ணீர் வழங்க பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசன சாகுபடிக்காக ஜூன் 12ம்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதன்படி தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும் அங்கிருந்து 16ம் தேதி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை மிஞ்சி சாகுபடி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது. இந்நிலையில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்பிரமணியன், தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணை மற்றும் கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணி உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர், தஞ்சாவூர், பூதலூர், ஒரத்தநாடு வட்டங்களில் கல்லணை கால்வாய் புனரமைப்பு பணி முடிந்துள்ளது. குறுவை சாகுபடிக்கு தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டும் என நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

The post கல்லணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தடையின்றி தண்ணீர்: தலைமை பொறியாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kurvai ,Kallanai ,Thanjavur ,Chief Engineer ,Public ,Works ,Department ,Trichy Zone ,Kuruvai ,Tiruvarur ,Nagai ,Dinakaran ,
× RELATED குறுவை சாகுபடிக்கு ஏக்கருக்கு 40...