
சென்னை:மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷணன் வெளியிட்ட அறிக்கை: மும்மொழி திட்டத்தை மீண்டும் அமலாக்கும் வகையிலும், 8வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 22 மொழிகளுக்கான அங்கீகாரத்தை பாஜ தொடர்ந்து தகர்க்கும் வகையிலும், இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதற்கான வகையிலும் செயல்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது. ஆகஸ்ட் 4 அன்று முன்மொழிந்து சட்டமாக்கியது இந்தியா இதுவரை பின்பற்றி வரும் மொழிக் கொள்கை மற்றும் பண்பாட்டு நடைமுறைகளுக்கு எதிரானதாகும். எனவே பாஜ ஆட்சியை வீழ்த்த தமிழக ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
The post ‘நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் ஒன்றிய பாஜ அரசு’ appeared first on Dinakaran.