×

முன்மாதிரி கிராம விருது 6 கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ.15 லட்சம் பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்மாதிரி கிராம விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 6 கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ.15 லட்சம், கேடயம் வழங்கி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2021-22ம் ஆண்டுக்கான, மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்மாதிரி கிராம விருதுகளுக்கு ஈரோடு மாவட்டம், குளூர் கிராம ஊராட்சி, திண்டுக்கல் மாவட்டம், நி.பஞ்சம்பட்டி கிராம ஊராட்சி மற்றும் தூத்துக்குடி மாவட்டம், நட்டாத்தி கிராம ஊராட்சி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

2022-23ம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்மாதிரி கிராம விருதுகளுக்கு கோயம்புத்தூர் மாவட்டம், நாயக்கன்பாளையம் கிராம ஊராட்சி, செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் கிராம ஊராட்சி மற்றும் இராமநாதபுரம் மாவட்டம், அரியனேந்தல் கிராம ஊராட்சி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆறு கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாநில அளவிலான முன்மாதிரி கிராம விருதுகளும், பரிசுத் தொகையாக தலா ரூ.15 லட்சத்தையும், கேடயமும் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியசாமி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, செயலாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post முன்மாதிரி கிராம விருது 6 கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ.15 லட்சம் பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,B.C. G.K. Stalin ,Chennai ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...