×

கர்நாடகாவில் போதிய தண்ணீர் இல்லை: சித்தராமையா பேட்டி

பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தபோது, ‘தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை. காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். இதை கர்நாடக அரசு ஏற்கவில்லை. எனினும், தமிழகத்திற்கு 38 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டு்ம் என கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ‘போதிய மழை பெய்யாததால் தண்ணீரை திறக்க முடியவில்லை. கேரளா மற்றும் குடகு மாவட்டத்தில் மிக குறைவான மழையே பெய்துள்ளது. அதனால் கர்நாடகாவில் போதிய அளவு தண்ணீர் இல்லை’ என்றார்.

The post கர்நாடகாவில் போதிய தண்ணீர் இல்லை: சித்தராமையா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Sitaramaiah ,Bangalore ,Caviri Management Commission ,Delhi ,Tamil Nadu ,
× RELATED ஆபாச வீடியோ சர்ச்சை: பெங்களூருவில்...