×

செப். 7ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம்: மார்க். கம்யூ. பாலகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை: செப்டம்பர் 7ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டில் 2 நாட்கள் நடந்த மாநிலக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, வேலைவாய்ப்பை உருவாக்க வலியுறுத்தி செப்.7ல் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post செப். 7ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம்: மார்க். கம்யூ. பாலகிருஷ்ணன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Government ,Mark ,Balakrishnan ,CHENNAI ,Dinakaran ,
× RELATED மிக்ஜாம் புயல் மீட்புப் பணிகளை...