×

அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25 வரை நீட்டிப்பு: மீண்டும் புழல் சிறையில் அடைப்பு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆக.25 வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்தனர். கடந்த 7ம் தேதி முதல் அமலாக்கத்துறை அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தது. 5 நாள் காவல் முடிந்ததை அடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது செந்தில் பாலாவியை மேலும் காவலில் விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில்பாலாஜியை விசாரிக்க மேலும் 5 நாட்கள் காவல் கேட்ட அமலாக்கத்துறையின் கோரிக்கையை நீதிபதி அல்லி நிராகரித்தார். அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25 வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை புழல் சிறைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

The post அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25 வரை நீட்டிப்பு: மீண்டும் புழல் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthilepalaji ,Chennai ,Chennai Primary Session Court ,Senthil Balaji ,Senthilephalaji ,
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...