×

சுதந்திர தினத்தை முன்னிட்டு தாம்பரம் – நெல்லை இடையே மற்றுமொரு சிறப்பு ரயில் இயக்கம்

நெல்லை: நாடு முழுவதும் சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களும் வருவதால், தென்மாவட்டங்களுக்கு வந்து செல்ல பயணிகள் அதிகளவு முண்டியடிக்கின்றனர். சுதந்திர தின விடுமுறையை கொண்டாட சென்னையில் உள்ள மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு வருவதால் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வே சார்பில் தாம்பரம் – நெல்லை – தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அந்த ரயில் நேற்று சென்னையில் புறப்பட்டு, இன்று (12ம் தேதி) நெல்லை வந்து சேருகிறது.

மறுமார்க்கமாக சிறப்பு ரயில் (06052) நெல்லையில் இருந்து இன்று மாலை 5:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4:10 மணிக்கு தாம்பரம் சென்று சேருகிறது. இந்நிலையில் சுதந்திரதினம் முடிந்து சென்னைக்கு செல்ல வசதியாக மற்றொரு சிறப்பு ரயிலையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த சிறப்பு ரயில் (எண்.06051) வரும் 14ம் தேதி திங்கள் மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் செவ்வாய் அதிகாலை 4.15 மணிக்கு நெல்லை வந்து சேருகிறது.

மறுமார்க்கத்தில் அதே ரயில்(எண்.06052) வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று மாலை 5.50 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுதினம் காலை 4.10 மணிக்கு தாம்பரத்தை சென்று சேருகிறது. இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் செல்கிறது. இந்த ரயிலில் 2 ஏசி பெட்டிகள், 9 ஸ்லிப்பர் பெட்டிகள், 5 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுதிறனாளிகளுக்கான பெட்டிகள் இடம் பெறுகின்றன.

The post சுதந்திர தினத்தை முன்னிட்டு தாம்பரம் – நெல்லை இடையே மற்றுமொரு சிறப்பு ரயில் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Independence Day ,Thambaram ,Nollam ,Nolla ,
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...