×

மாணவர்களிடையே சாதிய மோதல் ஏற்படும் சூழலை களைய வேண்டும்: டிடிவி தினகரன் வேண்டுகோள்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய மோதலால் பள்ளி மாணவரையும், அதனை தடுக்கமுயன்ற அவரது சகோதரியையும், சக மாணவர்கள் அரிவாளால் தாக்கியுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்புப் படிக்கும் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னத்துரையோடு ஒப்பிட்டு நன்றாக படிக்கும்படி சக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறியது, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியதால் இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே சாதி காரணமாக வேறுபாடு ஏற்பட்டிருப்பதும், அதன் காரணமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தும் அளவிற்கு மாணவர்கள் துணிவதும் நெஞ்சைப் பதறச்செய்கிறது. தமிழ்நாடு அரசு, ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் உரிய கண்காணிப்புடன் மாணவர்களிடையே இத்தகைய மோதல்கள் நேரிடுவதற்கு காரணமான சூழல்களைக் கண்டறிந்து அவற்றைக் களையவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post மாணவர்களிடையே சாதிய மோதல் ஏற்படும் சூழலை களைய வேண்டும்: டிடிவி தினகரன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : DTV ,Dhinakaran ,CHENNAI ,Twitter ,AMU ,General Secretary ,Dinakaran ,Nanguneri, Nellai ,
× RELATED போதை கடத்தலுக்கு உதவுபவர்கள் மீது...