×

மத்திய பிரதேசத்தில் சோகம்: விபத்தில் உயிரிழந்த தாயின் இறுதி சடங்குக்கு சென்ற மகனும் பலி

போபால்: மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ராணி தேவி (55). இவரது கணவர் இறந்து விட்டார். 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். உத்தரபிரதேச எல்லைக்கு அருகே ரேவா மாவட்டம், ஜாத்ரி கிராமத்தில் மூத்த மற்றும் கடைசி மகனுடன் வசித்து வந்தார். ராணி தேவி, தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக மகன் ஸன்னியுடன் பைக்கில் புறப்பட்டார். வீட்டிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் தபோரா எனும் இடத்தில் சென்றபோது எதிரே வந்த பைக் மோதியது. இருவரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அப்போது, இருவரையும் 80 கிமீ தொலைவில் உள்ள ரேவா பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். உடனே அங்கு ெகாண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராணி தேவி உயிரிழந்தார்.

இந்த செய்தியை கேள்விப்பட்டதும் இந்தூரில் வசித்து வந்த ராணி தேவியின் மற்றொரு மகன் சூரஜ் மிகவும் அதிர்ச்சியடைந்தார். எப்படியாவது தாயின் முகத்தை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர் அபிஷேக் சிங்குடன் ஒரு காரில் புறப்பட்டார். டிரைவர் உள்பட 3 பேர் வந்தனர். சாட்னா மாவட்டம் ராம்பூர் பகேலன் பகுதியில் வந்தபோது கார் விபத்திற்குள்ளானது. 3 பேரும் ரேவா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சூரஜ் உயிரிழந்தார். பின்னர், தாய், மகன் இருவரது உடல்களும் ஜாத்ரி கிராமத்தில் எரியூட்டப்பட்டது. 12மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து தாயும் மகனும் உயிரிழந்து ஒரே நாளில் எரியூட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post மத்திய பிரதேசத்தில் சோகம்: விபத்தில் உயிரிழந்த தாயின் இறுதி சடங்குக்கு சென்ற மகனும் பலி appeared first on Dinakaran.

Tags : Middle Pradesh ,Bopal ,Queen Devi ,Madhya Pradesh ,Dinakaran ,
× RELATED போபால் கூட்டம் ரத்தான நிலையில் 5 மாநில...