×

பா.ம.க. தலைவர் அன்புமணியை ஒரு அரசியல்வாதியாகவே கருதவில்லை: எடப்பாடி பழனிசாமி காட்டம்

சென்னை: பா.ம.க. தலைவர் அன்புமணியை ஒரு அரசியல்வாதியாகவே கருதவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்தார். அன்புமணி என்ன வேண்டுமென்றாலும் பேசுவார்; அதை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை. ஊடகங்களில் மட்டுமே அன்புமணி கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்றார். டெல்லியில் கூட்டணியில் இருக்கிறோம்; தமிழ்நாட்டில் எந்த அணியிலும் இல்லை என அன்புமணி பேசியதற்கு எடப்பாடி பதிலடி கொடுத்தார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடப்பெற மாட்டோம் என்று அன்புமணி சூசகமாக தெரிவித்த நிலையில் எடப்பாடி காட்டமாக பேட்டியளித்தார்.

The post பா.ம.க. தலைவர் அன்புமணியை ஒரு அரசியல்வாதியாகவே கருதவில்லை: எடப்பாடி பழனிசாமி காட்டம் appeared first on Dinakaran.

Tags : PMK ,President ,Anbumani ,Edappadi Palaniswami Kattam ,Chennai ,B.M.K. ,Edappadi Palaniswami ,BMC ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...