×

உதகை வந்த ராகுல் காந்தி: எல்லநள்ளியில் முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்துப் பேசுகிறார்..!!

உதகை: உதகை வந்த ராகுல் காந்தி: எல்லநள்ளியில் முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்துப் பேசவுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போதைய வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி 2 நாள் பயணமாக இன்று காலை கோவை வந்தார் அங்கிருந்து சாலை மார்க்கமாக உதகைக்கு வந்தடைந்தார். இங்கிருக்கக்கூடிய எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு வந்திருக்கும் அவர் சற்று நேரத்தில் சர்வதேச பள்ளியை சார்ந்த 5 மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

பின்னர் முன்னாள் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மாவுடன் கலந்துரையாடும் அவர் அங்கு ஹோம்மேட் சாக்லேட் தயாரிக்கக்கூடிய கூடத்திற்கு சென்று சாக்லேட் தயாரிப்பு முறை குறித்து கேட்டறிந்து கொள்கிறார். அதன் பின்னர் அங்கிருந்து கூடலூர் புறப்படும் அவர் வழியில் இருக்கக்கூடிய முத்தநாடுமந்து என்று சொல்லக்கூடிய தோடர் இன பழங்குடியின மக்கள் இருக்கும் கிராமத்திற்கு செல்கிறார்.

அங்கு அவர்களுடைய கோவிலை பார்வையிட்டு அவர்கள் நடனமாடும் நிகழ்ச்சியும் கண்டு ரசித்து அங்கிருக்கக்கூடிய தோடர் இன கால்பந்து வீரர்களுடன் விளையாடுகிறார். அதை தொடர்ந்து இன்று மாலை வயநாடு செல்வதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அவர் தற்போது உதகை அருகே இருக்கக்கூடிய எலநெல்லி தனியார் தாங்கும் விடுதியில் தற்போது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

The post உதகை வந்த ராகுல் காந்தி: எல்லநள்ளியில் முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்துப் பேசுகிறார்..!! appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Rakesh Sharmah ,Congress Party ,Elenalschool ,
× RELATED உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி...