×

முன்மாதிரி கிராம விருதிற்கு தேர்தெடுக்கப்பட்ட ஊராட்சிக்கு பரிசு தொகையுடன் கேடயமும் வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முன்மாதிரி கிராம விருதிற்கு தேர்தெடுக்கப்பட்ட ஊராட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பரிசு தொகையுடன் கேடயமும் வழங்கியுள்ளார். தமிழகத்தில் இருக்கக்கூடிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 2021-2022 மற்றும் 2022-2023ம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்பமாதிரி கிராமத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

இதில் பல்வேறு துறையில் கிராமத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய ஊராட்சிகளில் 6 ஊராட்சிகளை தேர்வு செய்து இந்த விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். குறிப்பாக குளூர், பஞ்சம்பட்டி, நட்டாத்தி, நாயக்கன்பாளையம், மேல்மருவத்தூர் மற்றும் அறியனேந்தல் உள்ளிட்ட 6 கிராம ஊராட்சியில் சிறப்பாக மருத்துவத்துறையில் கொண்டு சட்ட அமைப்பை உருவாக்கியதற்காக இந்த விருது வழக்கப்பட்டுள்ளது.

ரூ.15 லட்சம் மதிப்பிலான பரிசு தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். சிறந்து விளங்கிய ஊராட்சியில் ஆண்டு தோறும் சிறப்பாக பணி செய்து கட்டமைப்பு உருவாக்கிய கௌரவம் கொடுப்பது தமிழக அரசிற்கு வழக்கம், அதே போல இந்தாண்டும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

The post முன்மாதிரி கிராம விருதிற்கு தேர்தெடுக்கப்பட்ட ஊராட்சிக்கு பரிசு தொகையுடன் கேடயமும் வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,G.K. Stalin ,Chennai ,Krakshi ,G.K. Stalinbaris ,Tamil Nadu ,B.C. ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...