அரியலூர், ஆக. 12: அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே பேருந்து வசதி கேட்டு மறியலில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லாவிடம், ஸ்ரீபுரந்தான் ஊராட்சித்தலைவர் உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகி தண்டபாணி உள்ளிட்டோர் நேற்று மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், ஜெயங்கொண்டத்தில் இருந்து தா.பழூர் வழியாக முத்துவாஞ்சேரி கிராமத்துக்கு செல்வதற்கு நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சரியான முறையில் பேருந்துகள் இயக்கப்பட வில்லை.
இதனால் முத்துவாஞ்சேரி, காசாங்கோட்டை, ஸ்ரீபுரந்தான், அணைக்குடி, அறங்கோட்டை, அருள்மொழி உள்ளிட்ட கிராம மக்கள், தங்கள் அத்தியாவசிய தேவைக்காகவும், மருத்துவமனை, பள்ளி , கல்லூரி என அனைத்துக்கும் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் மேற்கண்ட நேரங்களில் இயங்க வேண்டிய பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி கடந்த 7ம்தேதி தா.பழூர் காவல் நிலையம் முன்பு மறியலில் 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். எனவே, காவல்துறையின் கண்ணியத்தையும், நற்பெயரையும் கெடுக்கும் வகையில் நடந்து கொண்ட காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மறியலில் ஈடுபட்ட மக்களை தாக்கியதாக புகார் நடவடிக்கை எடுக்க அரியலூர் எஸ்பியிடம் புகார் appeared first on Dinakaran.