×

பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கல் கட்டுமானம்: தொல்லியல் துறை விளக்கம்

 

புதுக்கோட்டை, ஆக. 12: பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செங்கல் கட்டுமானம் குறித்து தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அகழாய்வுக் குழியில் 3.8 செமீ ஆழத்தில் அரை வட்ட வடிவ செங்கல் கட்டிடம் ஒன்று வெளிப்பட்டுள்ளது. இந்கக் கட்டிட அமைப்பு, வடமேற்குப் பகுதியில் தொடங்கி தென்கிழக்கு பகுதி வரை நீண்டு, மூன்று அடுக்கினைக் கொண்டுள்ளது. இதன் விட்டம் 230 செமீ ஆகும். இவற்றுடன் வடகிழக்குப் பகுதியில் 57 செமீ ஆழத்தில் வாய்க்கால் போன்று செங்கல் கொண்டு அமைக்கப்பட்ட நீர்வழித்தடம் ஒன்று கிடைத்துள்ளது.

இதன் நீளம் 255 செமீ ஆகும். மேலும் மற்றொரு குழியில் வாய்க்கால் போன்ற நீர்வழித்தடம் ஒன்று கண்டறியப்பட்டது. மற்றொரு அகழாய்வுக் குழியில் 32 செமீ ஆழத்தில் வடகிழக்குப் பகுதியில் இருந்து வடக்கு- தெற்காக இரண்டு செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதியில் உள்ள கட்டுமானத்தின் நீளம் 200 செமீ ஆகும். இரண்டு செங்கல் கட்டுமானத்தின் இடைவெளி 80 செமீ உள்ளது. ஒரு கட்டிடத்தின் அகலம் 40 செமீ ஆகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கல் கட்டுமானம்: தொல்லியல் துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Polpanaikot ,Pudukottai ,Department of Archeology ,Polpanaikottai ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...