×

திருமயம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

 

திருமயம்,ஆக.12: திருமயம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை பகுதியில் பனையப்பட்டி போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் டிப்பர் லாரி அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அரசு அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததாக டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது சம்பந்தமாக குறிச்சிவயல் கிராமத்தைச் சேர்ந்த திராவிட மணி (50) மீது பனையப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமயம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tirumayam ,Pudukottai district ,Thirumayam ,
× RELATED திருமயம் அருகே ₹1.70 லட்சம் மதிப்பில் சோலார் உயர்கோபுர மின்விளக்கு