×

ஜாலியாக இருக்கலாம் என அழைத்து சென்று வாலிபரிடம் கத்திமுனையில் பணம் பறித்த பெண் கைது

தாம்பரம், ஆக.12: மேற்கு தாம்பரம், கன்னடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேவியர் (34). செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த புதன்கிழமை இரவு தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதி ஜிஎஸ்டி சாலையில் உள்ள சிக்னல் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் பைக்கை நிறுத்திவிட்டு, சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு நின்றிருந்த பெண், சேவியரை ஜாடை காட்டி அழைத்துள்ளார். சேவியர், அந்த பெண்ணின் அருகே சென்றபோது 500 ரூபாய் கொடுத்தால், இருவரும் ஜாலியாக இருக்கலாம் எனக்கூறி அழைத்துள்ளார். இதனால் சேவியர், அந்த பெண்ணுடன் ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் திடீரென அந்த பெண், மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து சேவியரின் மர்ம உறுப்பில் வைத்து அழுத்தி, அவரது சட்டை பையில் இருந்த ₹1,200 மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு, இதுகுறித்து வெளியே தெரிவித்தால், கொலை செய்து விடுவேன் என மிரட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சேவியர், சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையில் ஈடுபட்டனர். அதில், உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த மேரி சுஜாதா (35) என்பவர் பணம் பறித்தது தெரிந்தது. அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஜாலியாக இருக்கலாம் என அழைத்து சென்று வாலிபரிடம் கத்திமுனையில் பணம் பறித்த பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Dambaram ,Xavier ,West Dambaram, Kannatapalayam ,Dinakaran ,
× RELATED பயிரில் மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரமிட வேண்டும்