×

புதிய கல்பாக்கம் மீனவ குப்பத்தில் ₹8 கோடி மதிப்பில் நேர்கல் தடுப்பு அமைக்கும் பணி: வலைப்பின்னல் கூடமும் அமைக்க திட்டம்

மாமல்லபுரம், ஆக. 12: மாமல்லபுரம் அருகே கடலரிப்பை தடுக்கும் வகையில், ₹8 கோடி மதிப்பில் நேர்கல் தடுப்பு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சிக்கு உட்பட்ட புதிய கல்பாக்கம் மீனவ குப்பத்தில் 180க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு, பல ஆண்டுகளாக கடல் அலைகள் முன்னோக்கி வந்து மணல் அரிப்பு ஏற்பட்டு, அருகில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்து அந்தரத்தில் தொடங்கியது. இதனால், மீனவர்கள் தங்களது படகுகளை நிறுத்த இடம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும், கடற்கரைக்கு அருகில் உள்ள வீடுகள் இடிந்து விழும் அபாயநிலையில் உள்ளது. கடலரிப்பை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய கல்பாக்கம் மீனவர்கள் அரசுக்கும், மீன்வள துறைக்கும் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது, மீன்வளத் துறை மூலம் ₹8 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடலில் பாறை கற்களை கொட்டி நேர்கல் தடுப்பு அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், அங்கு இரண்டு வலைப்பின்னல் கூடமும் அமைக்க மீன்வள துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post புதிய கல்பாக்கம் மீனவ குப்பத்தில் ₹8 கோடி மதிப்பில் நேர்கல் தடுப்பு அமைக்கும் பணி: வலைப்பின்னல் கூடமும் அமைக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : New Kalpakkam Fisherman's Pond ,Mamallapuram ,New Kalpakkam ,pond ,Dinakaran ,
× RELATED முட்டுக்காடு அருகே விபத்தில்...