
- ஆதி பிரம்மோத்சவ தெர்த்திவஜ கோலாகலம்
- கெட்டுவனம் பேகநாயியம்மன்
- பள்ளிகொண்டா
- ஆதி பிரம்மோத்சவ தேர்த்திருவிழா
- கெட்டுவனம் பெஹனாயம்மன் கோயில்
- ஆதி பிரம்மோத்சவ தெர்த்தருவாச கோலகலம்
பள்ளிகொண்டா, ஆக.12: வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் ஆடி பிரமோற்சவ தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் கடந்த மாதம் 21ம்தேதி முதல் ஆடி வெள்ளி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 3ம் ஆடி வெள்ளியான கடந்த 5ம்தேதி ஆடி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் எல்லையம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் 7ம் நாளான நேற்று 4ம் ஆடி வெள்ளி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட உற்சவம் நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 6 மணிக்கு மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், உற்சவ மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மனை கோயிலில் இருந்து பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு ராஜவீதி, ரயில் ரோடு வீதியின் வழியாக தேரடிக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து தேரடி மண்டபத்தில் அம்மன் வைக்கப்பட்டடு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர், அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த 25 அடி உயரம் கொண்ட மரத்தேரில் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் உற்சவ அம்மன் வைக்கப்பட்டது. காலை 10.30 மணிக்கு ராஜவீதிகளுக்கு புறப்பட தயார் நிலையில் தேரடியில் இருந்த தேரை திரளான பக்தர்கள் பயபக்தியுடன் வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு பங்கேற்று தரிசனம் செய்தார். அவருடன் அணைக்கட்டு ஒன்றிய சேர்மன் பாஸ்கரன், மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணி, பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் சுபபிரியாகுமரன், செயல் அலுவலர் உமாராணி, மாவட்ட பிரதிநிதி அஸ்லாம், இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இதனால், கோயில் ராஜகோபுரத்தை சுற்றிலும் பக்தர்கள் வெள்ளமாய் காட்சி அளித்தன. கோயில் குளத்தை சுற்றி பக்தர்கள் கோழி, ஆடுகளை பலியிட்டு பொங்கல் வைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். கோயில் மைதானத்தில் இரவு 7 மணிக்கு வாணவேடிக்கையும், இரவு 10 மணிக்கு தெருக்கூத்து கலை நிகழ்ச்சியும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ராதேவி, இணை ஆணையர் ரமணி, கோயில் செயல் அலுவலர் நரசிம்ம மூர்த்தி, கணக்காளர் பாபு, திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.
The post ஆடி பிரமோற்சவ தேர்த்திருவிழா கோலாகலம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் appeared first on Dinakaran.