×

கோவில்பட்டி அரசு பள்ளியில் நூலகர் தின விழா

கோவில்பட்டி, ஆக. 12: கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய நூலகர் தின விழா நடந்தது. இதில் 1000 மாணவிகள், அரசு கிளை நூலகத்தில் நூலக உறுப்பினராக இணைத்து கொண்டு செல்போன் பயன்பாட்டை குறைத்து பள்ளி பாடப்புத்தகத்தோடு நூலக புத்தகத்தையும் வாசித்து பொது அறிவை வளர்த்து விரும்பும் துறைகளில் சாதனை புரியவும், வாசிப்பு பழக்கம் குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அனைவருக்கும் நூலக உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது. 1000 நூலக உறுப்பினருக்கான கட்டணத்தொகை ₹30 ஆயிரத்தை சுவிட்சர்லாந்து சங்கமம் தொண்டு நிறுவனம் நூலகத்துறைக்கு வழங்கியது.

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை உஷா ஷோஸ்பின், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியை கெங்கம்மாள் வரவேற்றார். பள்ளியின் பழைய மாணவியும் மருத்துவருமான கமலா மாரியம்மாள் கலந்து கொண்டு நூலக உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இதில் உதவி தலைமை ஆசிரியர்கள் கண்ணன், சீனிவாசன் உள்பட ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். அறிவியல் ஆசிரியர் பிரவின் நன்றி கூறினார்.

The post கோவில்பட்டி அரசு பள்ளியில் நூலகர் தின விழா appeared first on Dinakaran.

Tags : Librarian's Day ,Kovilpatti Government School ,Kovilpatti ,National Librarian Day ,Govt ,Girls Higher Secondary ,School ,Librarian's Day Ceremony ,Government School ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் சுமை...