×

நெல்லை நீதிமன்றத்தில் இன்று சிறப்பு மக்கள் நீதிமன்றம்

கேடிசி நகர், ஆக.12: நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் 2023ம் ஆண்டின் வருவாய்த்துறை வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் பாளையில் உள்ள நீதிமன்றத்தில் நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் இன்று (12ம்தேதி) நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய்த்துறை வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் உள்பட 200 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. நெல்லை நீதிமன்றத்தில் நடைபெறும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சீனிவாசன் தலைமையில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன் செய்துள்ளார்.

The post நெல்லை நீதிமன்றத்தில் இன்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Special People's Court ,Nellie Court ,KDC Nagar ,Nellai District Legal Affairs Commission ,Nellai Court ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி