×

மார்த்தாண்டத்தில் சூதாடிய 4 பேர் கைது

மார்த்தாண்டம், ஆக. 12: மார்த்தாண்டம் சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ் பாபு தலைமையிலான போலீசார் மார்த்தாண்டம் காய்கறி சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காய்கறி சந்தைக்கு போலீசார் சென்று பார்த்தபோது, 4 பேர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்தபோது, விரிகோடு குளக்கச்சி பகுதியை சேர்ந்த அழகேசன் (44), ஆர்.சி. தெருவை சேர்ந்த சுனில், மார்த்தாண்டம் வடக்குத் தெருவை சேர்ந்த சாமுவேல் ராஜா (57), காட்டுவிளை பகுதியை சேர்ந்த ஜோனி (37) என்பது தெரியவந்தது. 4 பேரும் கூலி தொழிலாளிகள் ஆவர். இதையடுத்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டுக்கட்டுகள், ₹150 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

The post மார்த்தாண்டத்தில் சூதாடிய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Vinesh Babu ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படாது: அமைச்சர் சிவசங்கர் உறுதி